பீகாரில் ரயிலில் தனியாகப் பயணித்த இளம் பெண் ஒருவர், சக பயணிகளால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை 3-ஆம் தேதி சீவானிலிருந்து பாடலிபுத்ரா செல்லும் ரயிலின் பொதுப் பெட்டியில் பயணித்தபோது, தற்காப்புக்காக மேல் இருக்கைக்குச் சென்று தூங்கிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணை, கீழே அமர்ந்திருந்த முதியவர்கள் சிலர் அநாகரிகமாகத் தொட்டுத் தொந்தரவு செய்துள்ளனர்.
இது குறித்து அந்தப் பெண் அவர்களிடம் தட்டிக்கேட்டும் அவர்கள் கண்டுகொள்ளாமல் மீண்டும் மீண்டும் அநாகரிகமாக நடந்துகொண்டதால், பயந்துபோய் அந்த இருக்கையை விட்டு மற்றொரு பெட்டிக்கு அவர் மாற நேரிட்டது.
இரண்டாவது பெட்டிக்கு மாறிய பிறகும் அந்தப் பெண்ணுக்குப் பாதுகாப்பு கிடைக்கவில்லை. அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் கதவருகே அமர்ந்திருந்த அவரிடம், ஒரு இளைஞர் தேர்வு மையத்துடன் தனக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி, பணத்தைப் பெற்றுக்கொண்டு தேர்வில் தேர்ச்சி பெற உதவுவதாக ஆசை காட்டியுள்ளார்.
View this post on Instagram
“>
மேலும், அவர் மறுத்தும் விடாமல் தொடர்ந்து அவரிடம் அலைபேசி எண்ணைக் கேட்டு வற்புறுத்தியுள்ளார். பொதுப் போக்குவரத்தில் தனியாகப் பயணிக்கும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதை உணர்த்தும் வகையில், அந்தப் பெண் தனது துயரமான அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தச் சம்பவம் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலையை மீண்டும் பொதுவெளியில் எழுப்பியுள்ளது.
