அமெரிக்காவின் வரலாற்று சிறப்புமிக்க 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிராம்பிற்கும், அமெரிக்க மக்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, 140 கோடி இந்திய மக்கள் சார்பாக அதிபர் டிரம்பிற்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே இருப்பது வெறும் ஒரு மூலோபாய கூட்டணி (மூலோபாய கூட்டு) மட்டுமல்ல, அதைவிட மேலானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையே ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மக்களின்எல்லையற்ற ஆற்றல் ஆகியவற்றின் மீது பொதுவான நம்பிக்கை, இந்த நட்பை உலக நன்மைக்கான ஒரு சக்தியாக மாறுகிறது என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அடுத்த 250 ஆண்டுகள் அமெரிக்காவிற்கு இன்னும் பெரிய அமைதியையும், முன்னேற்றத்தையும் தந்து, இருநாட்டு உறவை புதிய உச்சத்திற்கு செல்ல வேண்டும் என தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

இந்த 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாஷிங்டனில் உள்ள நேஷனல் மாலில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உரையாற்ற உள்ள நிலையில், 10 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் மற்றும் இடி மின்னலையும்பொருட்படுத்தாமல் மக்கள் குவிந்து வருகின்றனர்.

“>

மேலும் முந்தைய அதிபர்களைப் போலல்லாமல் டிரம்ப் இந்த அதிகாரப்பூர்வ கொண்டாட்டத்தை ராணுவ அணிவகுப்பு மற்றும் பிரம்மாண்டமான வானவேடிக்கைகளுடன் தனது பாணியிலான மாஸ் பொதுக்கூட்டமாக மாற்றுவது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தையும் உலக நாடுகளின் கவனிப்பையும் பெற்றுள்ளது.