மார்ச் மாதத்தில் டி20 உலகக் கோப்பையை வென்று தந்த போதிலும், அடுத்த 3 மாதங்களிலேயே சூர்யகுமார் யாதவின் கேப்டன்சி பறிக்கப்பட்டு, இந்திய அணியிலிருந்தும் அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பை மற்றும் ஐபிஎல் 2026 தொடர்களில் சூர்யா பேட்டிங்கில் தடுமாறியதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 2028 ஒலிம்பிக் மற்றும் டி20 உலகக் கோப்பையை மனதில் வைத்து ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்; ஆனால், அவரது தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, பலமில்லாத அயர்லாந்திடம் 2-0 என படுதோல்வி அடைந்து ஒயிட்வாஷ் ஆகி அதிர்ச்சியளித்துள்ளது. இந்த மோசமான தோல்வியால் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கோச் கௌதம் கம்பீர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

​இதற்கிடையே, மும்பை சலூன் ஒன்றில் சூர்யகுமார் யாதவிடம் ரசிகர்கள் “உங்களை மிஸ் செய்கிறோம்” என்று கூறியதற்கு, “என்னைவா? எல்லாம் நன்றாகத்தானே போகிறது” என சூர்யா நக்கலாகப் பதிலளித்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த பதிலின் மூலம் அவர் கோச் கௌதம் கம்பீரைத் தான் மறைமுகமாகச் சாடியுள்ளார் என சர்ச்சைகள் வெடித்துள்ளன.

When Suryakumar Yadav went to the salon for a haircut, fans told him, “Bro, we’re missing you in the series.” Surya replied, “muze? Are achha to chal Raha hai"😅🙏

India got whitewashed by Ireland in the series, and Surya is saying, “Oh, it’s going well.😭🤣 pic.twitter.com/rr9OMNxDSy
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) July 4, 2026

உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு, 2028 ஒலிம்பிக் வரை தானே கேப்டனாக இருக்க விரும்புவதாக சூர்யா பொதுவெளியில் பேசியது கம்பீருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. சூர்யா தனது கேப்டன்சியில் 80.76% வெற்றிகளைப் பெற்றுத் தந்து, 3272 ரன்கள் குவித்து மாஸ் ரெக்கார்ட் வைத்துள்ள நிலையில், தற்போது அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.