விமானப் பணிப்பெண்ணாகப் பணிபுரியும் ஒரு மகள், தனது பெற்றோருக்குத் தந்துள்ள நெகிழ்ச்சியான ஆச்சரியம் இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. அந்தப் பெண் தான் வேறொரு விமானத்தில் பணியில் இருப்பதாகத் தனது பெற்றோரிடம் முன்னரே பொய் கூறியுள்ளார்.
ஆனால், பெற்றோர் தங்களது பயணத்திற்காக விமானத்திற்குள் நுழைந்தபோது, அங்கே அவர்களை வரவேற்க அவர்களது மகளே பணிப்பெண் உடையில் நின்றுகொண்டிருந்தார். எதிர்பாராத விதமாகத் தனது மகளை அங்கு கண்டதும் அதிர்ச்சியடைந்த பெற்றோர், நெகிழ்ச்சியுடன் “ஏன் பொய் சொன்னாய்?” என்று அவரிடம் செல்லமாகக் கேட்டுத் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Flight attendant tells parents she’s on another flight, then welcomes them onboard: ‘Jhut kyu boli?’ https://t.co/ZV5ET2dDNX
“>
அதோடு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த அழகான வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது நெகிழ்ச்சியான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “பெற்றோர்கள் தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு அற்புதமான ஆச்சரியம் இது” என்றும், “அந்தப் பெற்றோரின் கண்களில் தெரிந்த பெருமிதமே எல்லாவற்றையும் உணர்த்துகிறது” என்றும் பலரும் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் மகளின் இந்த அன்பான செயல், தங்களது பிள்ளைகளின் உழைப்பையும் உயர்வையும் கண்டு பெருமைப்படும் அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு சிறந்த பரிசாக அமைந்துள்ளது. இணையத்தில் இந்த வீடியோ காட்சி லச்சக்கணக்கான பார்வையை பெற்றுள்ளது.
