இலங்கை: அண்டை நாடான இலங்கையில் உள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர கலவரம் தற்போது சர்வதேச அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் நீர்கொழும்பு பகுதியில் உள்ள மத்திய சிறைச்சாலையில் நேற்று இருவேறு கைதிகள் குழுக்களுக்கு இடையே திடீரென ஒரு கடுமையான மோதல் வெடித்தது.
”சிறைக்குள்ளே வெடித்த பயங்கர கேங் வார்!”
சிறைச்சாலையின் உள்ளே இருந்த கைதிகள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து, பயங்கரமான ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் வெறித்தனமாகத் தாக்கிக் கொள்ளத் தொடங்கினர். இந்த மோதல் கட்டுக்கடங்காமல் போகவே, நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வரச் சிறைக்காவல் அதிகாரிகள் அதிரடியாக உள்ளே நுழைந்தனர். ஆனால், வெறி உச்சத்தில் இருந்த கைதிகள், காவல் அதிகாரிகள் மீதும் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
25 பேர் ரத்த வெள்ளத்தில் பரிதாப பலி!
இந்தக் கொடூரக் கலவரத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த நிலையில், தற்போது உயிரிழப்பு எண்ணிக்கை 25 ஆக அதிரடியாக உயர்ந்துள்ளது. இதில் கொடுமை என்னவென்றால், கலவரத்தைக் கட்டுப்படுத்தச் சென்ற 2 சிறைக்காவல் அதிகாரிகளும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சிறைக்குள் கலவரம் வெடித்து 25 பேர் பலியான செய்தி காட்டுத்தீ போலப் பரவியதை அடுத்து, சிறைச்சாலையின் வாசலில் கைதிகளின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஒரே நேரத்தில் திரண்டதால், அப்பகுதியே ஸ்தம்பித்துப் போயுள்ளது. கலவரத்திற்கான முழுக் காரணம் என்ன என்பது குறித்து இலங்கை அரசு தற்போது தீவிர விசாரணை நடத்தி வருவதால், சர்வதேச அளவில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
