தமிழக முதல்வர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பெரம்பூர் தொகுதியில் திறப்பு விழாவுக்குத் தயாராகி வருகிறது.

இந்த அலுவலகக் கட்டடம் மட்டுமன்றி, இதற்கு நேர் எதிரே அமைந்துள்ள சுவர்களில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான சித்திரங்கள் தற்போது பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றன.

குறிப்பாக, தவெக கட்சியின் கொள்கைகளையும் முன்னெடுப்புகளையும் பிரதிபலிக்கும் வகையிலான ‘சிங்கப்பெண்’ உள்ளிட்ட பிரம்மாண்ட சுவர் ஓவியங்கள் அந்தப் பகுதி முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் சுறுசுறுப்பையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.