தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஆய்வுக்காக சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த மாணவி ஒருவரிடம் அமைச்சர் கீர்த்தனா ஆங்கிலத்தில் கேள்வி கேட்க அந்த மாணவிக்கு பதில் தெரியாமல் நின்று கொண்டிருந்தார்.

உடனே அமைச்சர் கீர்த்தனா ஆசிரியரிடம் நான் உங்கள் அப்பா என்ன செய்கிறார் என்று சிம்பிலாக தான் கேட்டேன் அதற்கு கூட விடை தெரியவில்லை எனக் கேட்க உடனே ஆசிரியை குழந்தையிடம் உனக்கு தெரிந்ததை தைரியமாக சொல்லுடா என்று கூறினார்.

பின்னர் அமைச்சர் கீர்த்தனா ஆங்கிலத்தில் அதே கேள்வியை கேட்க அதற்கு சிறுமி பதில் வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர் கீர்த்தனா முதல் பெஞ்சில் இருக்கும் மாணவியே இப்படி இருக்கும்போது லாஸ்ட் பெஞ்சில் இருக்கும் மாணவிகளின் நிலைமையை நினைத்துப் பாருங்கள் என்றார். அவருடைய இந்த பேச்சு சர்ச்சையாக மாறிய நிலையில் இதற்கு முன்னால் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள பதிவில், மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர லாஸ்ட் பெஞ்ச் என்று சுட்டிக்காட்டி பேசுபவர்கள் எல்லாம் பள்ளிக்கு செல்லாதீர்கள் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.‌ மேலும் இதேபோன்று நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் படிக்கும் பிள்ளைகளிடம் துருவி துருவி கேள்வி கேட்டு திணற வைப்பதோடு ஆசிரியர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்தி மகிழ வைப்பதன் பெயர் ஆய்வு கிடையாது அராஜகம் என்று பதிவிட்டுள்ளார்.