சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் மற்றும் லைக்ஸ்களுக்காக இளைஞர்கள் சிலர் ஆபத்தான பைக் ஸ்டண்டுகளில் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பெங்களுருவில் உள்ள ஒரு சாலையில் கடந்த 4-ம் தேதி அவசரச் சிகிச்சைக்காகச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு முன்பாகச் சிலர் பைக்குகளில் ஆபத்தான முறையில் ‘வீலிங்’ செய்தும், அதன் வழியை மறித்தும் ரகளை செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ஆம்புலன்ஸின் சைரன் சத்தம் என்பது ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்கான அலறல். அது நீங்கள் பைக் ஸ்டண்ட் செய்வதற்கான பின்னணி இசை அல்ல என்று இந்த பொறுப்பற்ற செயலுக்கு எதிராகச் சமூக வலைத்தளங்களில் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இது போன்ற ஆபத்தான மற்றும் பொறுப்பற்ற செயல்கள் சாகசம் அல்ல என்றும், ஒரு மனிதனின் உயிர் பிழைப்பதற்கான கடைசி வாய்ப்பைத் தட்டிப்பறிக்கும் கொடூரமான குற்றம் என்றும் நெட்டிசன்கள் பலரும் தங்களது குமுறல்களைப் பகிர்ந்து வருகின்றனர்.