திரையரங்கில் படம் பார்க்கச் சென்ற போது, காதுகேளாத தனது காதலிக்குத் திரைப்படத்தின் வசனங்களையும் காட்சிகளையும் ஒரு காதலன் சைகை மொழியிலேயே  மிக அழகாக விளக்கியுள்ளார். காதலியின் மகிழ்ச்சிக்காகத் திரையில் ஓடும் காட்சிகளைத் துளியும் தவறவிடாமல், அதே நேரத்தில் முழு அர்ப்பணிப்போடு சைகை மூலம் அவர் கதையைக் விவரிக்கும் இந்தச் செயல் பார்ப்பவர் நெஞ்சங்களை உருக வைத்துள்ளது. இந்த நெகிழ்ச்சியான தருணத்தைப் படம்பிடித்து இணையத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து,

 

 

View this post on Instagram

 

A post shared by TV1 INDIA खबरों का नया अड्डा* (@tv1indialive)

உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான நெட்டிசன்கள் அந்தக் காதலனின் மாறாத அன்பைப் பாராட்டி வருகின்றனர். “உண்மையான பாசம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்தத் தம்பதியே சாட்சி” என்றும், “வார்த்தைகளை விட செயல்களே அன்பை அதிகம் உணர்த்துகின்றன” என்றும் பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். காதலை வெளிப்படுத்த ஆடம்பரமான பரிசுகள் தேவையில்லை, ஒருவருக்கொருவர் காட்டும் அக்கறையும் துணையாக நிற்பதுமே போதும் என்பதை உணர்த்தும் இந்த வீடியோ, தற்போதைய இணையதளத்தின் ஆகச்சிறந்த ‘காதல் இலக்காக’  கொண்டாடப்பட்டு வருகிறது.