தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங் மற்றும் அவரது மனைவி கிம் ஹை கியுங் ஆகியோர் அங்குள்ள ஒரு பாரம்பரிய உள்ளூர் சந்தைக்குச் சென்று வியாபாரிகளுடன் கலந்துரையாடினர். அப்போது, ஒரு கடையில் இருந்த பொருளின் விலையை அதிபரின் மனைவி கிம், அங்கிருந்த கடைக்காரரிடம் கேட்டுள்ளார்.
அவர் விலையைச் சொல்லி முடிப்பதற்குள், அதிபர் லீ ஜே மியுங் சற்றும் யோசிக்காமல் தனது பர்ஸை எடுத்து அந்தப் பொருளுக்கான பணத்தை உடனடியாகச் செலுத்தினார். பொதுவாக இது போன்ற பயணங்களின் போது அதிகாரிகளோ அல்லது உதவியாளர்களோதான் பணப் பரிவர்த்தனைகளைக் கவனித்துக் கொள்வார்கள். ஆனால், எவ்வித பந்தாவும் இன்றி அதிபரே நேரடியாகப் பணத்தை எடுத்துக் கொடுத்த விதம் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்துள்ளது.
View this post on Instagram
உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும், சிறு வியாபாரிகளுக்கு ஆதரவளிக்கவும் நடத்தப்பட்ட இந்த பொதுமக்களுடனான சந்திப்பில், இந்த எளிய நிகழ்வு இணையத்தில் பரவி வருகிறது.
நாட்டின் உச்சபட்ச பதவியில் இருந்தாலும், ஒரு சாதாரண கணவரைப் போல மனைவியின் ஆசையை அறிந்து உடனடியாகப் பணம் கொடுத்த அதிபரின் எளிய குணத்தைப் பாராட்டி பலரும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
