இமாசலப் பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மணாலியில், பாராகிளைடிங் விளையாட்டின் போது எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தின் அதிரவைக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.

மணாலியில் உள்ள ஒரு பிஸியான நெடுஞ்சாலையின் நடுவே, பாராகிளைடர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து திடீரென தரையிறங்கியுள்ளது. வானில் பறந்து கொண்டிருந்த நபர், திடீரென சாலையின் மையப்பகுதியில் வந்து விழுந்த இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் பொதுமக்களை பதற வைத்துள்ளது.

தற்போது பருவமழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மோசமான வானிலையிலும் பாராகிளைடிங் சேவை சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படும் இத்தகைய சேவைகளை அதிகாரிகள் கண்காணிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழைக்காலம் தீவிரமடைந்து வரும் சூழலில், சாகச விளையாட்டுகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை அரசு இன்னும் பலப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை இதன் மூலம் வலுத்துள்ளது.