மும்பை இரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் சிக்கிய ஒரு தெரு நாயின் உயிரைக் காப்பாற்ற, லோக்கல் இரயில் ஓட்டுநர் சாதுரியமாகச் செயல்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மும்பையில் பெய்து வரும் பலத்த மழையின் போது, அந்த நாய் தப்பிக்க வழியில்லாமல் தண்டவாளத்தில் மாட்டிக்கொண்டது.
அப்போது அதே பாதையில் அதிவேகமாக வந்த லோக்கல் இரயிலின் ஓட்டுநர், தண்டவாளத்தில் நாய் இருப்பதை முன்கூட்டியே கவனித்து, சாமர்த்தியமாக இரயிலின் வேகத்தைக் குறைத்து அதைச் சரியான நேரத்தில் நிறுத்தினார். இரயில் ஓட்டுநரின் இந்தத் துரிதமான மற்றும் மனிதாபிமானமிக்க செயலால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டு, அந்த வாயில்லா ஜீவனின் உயிர் காப்பாற்றப்பட்டது.
बापरे! एका कुत्र्यामुळे कुर्ला स्टेशनवर काय घडलं पाहा; मोटारमनच्या हुशारीनं पुढचा थरार टळला, VIDEO होतोय व्हायरल https://t.co/NkhcfywjRV via @loksattalive
“>
இந்நிலையில் குர்லா இரயில் நிலைய மேடையில் இருந்த பயணிகள் இந்தத் திகைப்பூட்டும் காட்சியைத் தங்களது மொபைல் போனில் படம் பிடித்துள்ளனர். தற்போது இணையத்தில் மிக வேகமாகப் பரவி வரும் இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள், லோகோ பைலட்டின் சமயோசித புத்தியையும், அவரது கருணையுள்ளத்தையும் பாராட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
