உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களே கணிக்க முடியாமல் திணறும் இங்கிலாந்து பிட்ச்சில், இந்திய அணியின் சீனியர் வீரர் அபிஷேக் சர்மாவும், அறிமுக வீரரான 15 வயது வைபவ் சூர்யவன்ஷியும் அதிரடி பதிலடி கொடுத்துள்ளனர். மைதானத்தில் பலத்த காற்று வீசிய போது, “பந்தை நேராக அடிக்கவா அல்லது பின்னால் அடிக்கவா?” என அபிஷேக் சர்மா, 15 வயது சிறுவன் வைபவிடம் ஆலோசனை கேட்ட சுவாரஸ்யமான உரையாடல் ஸ்டம்ப் மைக்கில் சிக்கி வைரலாகி வருகிறது. பிட்ச் டபுள் பவுன்ஸ் ஆவதையும், பந்தின் வேகத்தையும் துல்லியமாக கணித்த வைபவ், பார்த்து விளையாடுமாறு கொடுத்த அட்வைஸை கேட்டு அடுத்த பந்திலேயே மிட்-ஆன் திசையில் மாஸ் பவுண்டரி அடித்தார் அபிஷேக்.

Debut day, wise words ft. #VaibhavSooryavanshi 🗣️😌#ENGvIND 2nd T20I 👉 Streaming LIVE on JioHotstar! pic.twitter.com/OoWd7lUbEy
— Star Sports (@StarSportsIndia) July 4, 2026

​இந்த ஜோடி வெறும் 4.5 ஓவர்களில் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தது. இதில் வைபவ் 2 சிக்ஸர்களுடன் 14 ரன்களும் (140 ஸ்ட்ரைக் ரேட்), அபிஷேக் சர்மா 43 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் முக்கிய வீரரான அபிஷேக், அனுபவமே இல்லாத 15 வயது சிறுவனிடம் களத்தில் வியூகம் வகுக்க ஆலோசனை கேட்டது தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.