சாலைகளில் ஆபத்தில் இருப்பவர்களுக்கு ஓடிச் சென்று உதவி செய்வது மனிதநேயத்தின் அடையாளம். ஆனால், அந்த மனிதநேயத்தையே தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அரங்கேற்றப்பட்டுள்ள ஒரு நூதனத் திருட்டுச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வரும்போது, திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுவது போல் நடித்துள்ளார். இதைப் பார்த்தவுடன் அருகில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு இளைஞரும், சுமார் 40 வயது மதிக்கத்தக்க மற்றொரு நபரும் பதற்றமடைந்து, மனிதாபிமானத்தோடு அவருக்கு உதவ ஓடிச் சென்றுள்ளனர். ஆனால், அங்குதான் ஒரு மிகப்பெரிய ‘ட்விஸ்ட்’ ஒளிந்திருந்தது.

பைக் ஓட்டி வந்த நபரும், அவருக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்த ஒரு இளைஞர் ஒரே கூட்டாளிகள் ஆவர். அந்த 40 வயது நபரை ஏமாற்றித் திருடுவதற்காகவே அவர்கள் இருவரும் சேர்ந்து இந்த விபத்து நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.

அந்த நபர் பைக்கைத் தூக்க உதவி செய்யும் அந்தச் சில நொடிப் பொழுதில், அவரது கவனத்தைத் திசைதிருப்பி, பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் மற்றும் பணப் பையை அவருக்குத் தெரியாமல் அந்தச் இளைஞர் மிக லாவகமாகத் திருடிக்கொண்டு, பைக்கில் இருந்தவனுடன் சேர்ந்து மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான்.

அவர்கள் சென்ற 5 முதல் 10 வினாடிகளுக்குப் பிறகுதான், தனக்கு உதவ வந்தவர்களை ஏமாற்றிவிட்டுத் தனது போனும் பணமும் களவாடப்பட்டதை அந்த நபர் உணர்ந்துள்ளார். அதிர்ச்சியடைந்த அவர், திருடர்களைத் துரத்திப் பிடிக்க முயன்றபோதிலும் அதற்குள் அவர்கள் அந்த இடத்தை விட்டு மறைந்துவிட்டனர். இந்தச் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் பரவி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by National Buzz Official (@nationalbuzzofficial)

“>

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “உதவி செய்யப் போன பாவத்திற்கு இப்படி ஒரு கொடுமையா? இந்த உலகத்தில் நல்லதுக்கே காலம் இல்லை” என்றும், “இனி ரோட்டில் யாராவது விழுந்தால் கூட உதவி செய்ய பயமாக இருக்கிறது” என்றும் தங்களது ஆதங்கங்களையும் கோபத்தையும் கமெண்ட்டுகளில் கொட்டி வருகின்றனர்.