இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில், நடிகர் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் வெளியாகி தமிழ் சினிமாவின் மிக முக்கியத் திரைப்படமாக மாறியது ‘காதல்’. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில், தன் காதலைப் பிரிந்து வேறு வாழ்க்கைக்குச் சென்ற கதாநாயகி, தன் காதலன் தன்னை நினைத்தே மனநலம் பாதிக்கப்பட்டு வீதியில் பைத்தியமாகத் திரிவதைக் கண்டு, “தப்பு பண்ணிட்டேனே, இப்படி நடந்திருக்கக் கூடாதே” என்று குற்ற உணர்ச்சியில் கதறி அழுவார்.

தமிழ் சினிமா வரலாற்றில் மிக ஆழமான, ஐகானிக்கான இந்த க்ளைமாக்ஸ் காட்சியை சமூக வலைத்தளத்தில் ‘ரீல்ஸ்’ (Reels) செய்கிறேன் என்ற பெயரில் ஒரு பெண்மணி செய்துள்ள மனிதாபிமானமற்ற செயல் தற்பொழுது இணையத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

லைக்குகளுக்காகவும், வியூஸ்களுக்காகவும் எதையும் செய்யலாம் என்ற நோக்கில், அந்தப் பெண் வீதியில் நிஜமாகவே ஆதரவற்று, மனநலம் பாதிக்கப்பட்டுச் சாலையோரமாகப் படுத்திருந்த ஒரு நபரைத் தன் ரீல்ஸ் வீடியோவிற்குப் பயன்படுத்தியுள்ளார். அந்தப் பரிதாப நிலைக்குரிய நபரின் அருகே அமர்ந்து, ‘காதல்’ படக் காட்சியைப் போல அவர் அழுது ரீ ஆக்ட் செய்த வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Shifana (@shifana.pattasu)

“>

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கொந்தளிப்புடன் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். “வியூஸ் பெற வேண்டும் என்பதற்காக ஒரு மனிதனின் அவல நிலையை, அவரது அனுமதியின்றி இப்படி வக்கிரமாகப் பயன்படுத்துவது அசல் மனிதாபிமானமற்ற செயல்” என்றும், “ரீல்ஸ் மோகத்தால் மனித நேயம் செத்துக்கொண்டிருக்கிறது” என்றும் நெட்டிசன்கள் அந்தப் பெண்ணை மிகக் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.