ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகரில் கடந்த ஜூன் 18-ஆம் தேதி, 13 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டிற்குச் செல்வதற்காக ஈ-ரிக்ஷாவில் ஏறியுள்ளார். ஆனால், அந்த ரிக்ஷா ஓட்டுநர் சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் செல்லாமல், கடத்திச் சென்று ஒரு ஹோட்டலில் விற்றுள்ளார்.
ஜூன் 22 அன்று போலீஸாரால் அந்தச் சிறுமி மீட்கப்படும் வரையிலான அந்த ஐந்து நாட்களுக்குள், அச்சிறுமி நான்கு வெவ்வேறு உள்ளூர் ஹோட்டல்களுக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறுமியின் அழுகுரலையும் சத்தத்தையும் அடக்குவதற்காக அவருக்குக் கட்டாய மதுபானம் புகட்டப்பட்டு, கொடூரமான முறையில் 32 ஆண்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் என்ற நெஞ்சைப் பதறவைக்கும் பகீர் தகவல் தற்பொழுது வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போலீஸார், அந்த ஈ-ரிக்ஷா ஓட்டுநர் உட்பட இந்தச் சங்கிலித் தொடர் குற்றத்தில் தொடர்புடைய 12 பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், இந்த அக்கிரமத்திற்குத் துணையாக இருந்த மற்றும் சிறுமி அடைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு ஹோட்டல்களும் தரைமட்டமாக்கப்பட்டு இடிக்கப்பட்டுள்ளன.
On 18th June, a 13-year-old girl took e-rickshaw to go to her home in Sriganganagar, Rajasthan.
Instead of taking her home, the driver kidnapped her and sold her to someone in a hotel. She was rescued from a hotel on 22nd June by police.
In these five days, this minor girl was… pic.twitter.com/GdhZAcZsnF
— Incognito (@Incognito_qfs) July 4, 2026
“>
இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், “அந்தப் பிஞ்சுச் சிறுமியைத் சித்திரவதை செய்த மற்றும் அதற்குத் துணையாக நின்ற அத்தனை மிருகங்களுக்கும் தூக்குத் தண்டனை மட்டுமே சரியான தீர்ப்பு; மனிதநேயமற்ற இந்த அரக்கர்கள் ஒரு நொடி கூட இந்தச் சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்கள்” என்று ஒட்டுமொத்த பொதுமக்களும் தங்களது கடுமையான ஆக்ரோஷத்தையும், குற்றவாளிகளுக்கு எதிரான மரண தண்டனைக் கோரிக்கையையும் எழுப்பி வருகின்றனர்.
