தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நாளை சேலத்தில் பிரம்மாண்ட பரப்புரை மேற்கொள்ள உள்ள நிலையில், காவல்துறை பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்துப் பேசிய சேலம் காவல் துணை ஆணையர் பாலச்சந்திரா, பாதுகாப்பு கருதி மாநாடு நடக்கும் இடத்திற்கு அருகே உள்ள மலை மீது ஏறுவதற்கு யாருக்கும் அனுமதி இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், அசம்பாவிதங்களைத் தடுக்கவும் மலைப் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்று அவர் எச்சரித்துள்ளார். விஜய்யின் வருகைக்காகத் தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ள நிலையில், காவல்துறையின் இந்தத் திடீர் கட்டுப்பாடுகள் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
