ரோஹித் சர்மா ஆரம்ப காலத்தில் கிரிக்கெட் களத்திற்குள் வந்தபோது, அவர் ஒரு சிறந்த தலைவராக (Leader) உருவெடுப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என பிரக்யான் ஓஜா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் ஆரம்பக் காலங்களில் டெக்கான் சார்ஜர்ஸ் (Deccan Chargers) அணியில் ரோஹித் விளையாடியபோது, அப்போதைய கேப்டன் ஆடம் கில்கிறிஸ்ட் தான் அவரது ஆலோசனைகளைக் கேட்டு வியந்துபோய், “ரோஹித் இப்போது அணியை வழிநடத்தத் தயாராகிவிட்டார்” என்று முதன்முதலில் ஆதரவு தெரிவித்தார்.

ஒருவேளை ஐபிஎல் ஏலத்தில் மாற்றங்கள் நிகழாமல் இருந்திருந்தால், டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கே ரோஹித் கேப்டனாகப் பொறுப்பேற்றிருப்பார் என்றும், கில்கிறிஸ்ட் காட்டிய அந்த நம்பிக்கைதான் இன்று ரோஹித்தை ஒரு வெற்றிகரமான கேப்டனாக மாற்றியுள்ளது என்றும் ஓஜா சுட்டிக்காட்டியுள்ளார்.