ஆஸ்திரேலியா மற்றும் பப்புவா நியூ கினியாவில் காணப்படும் ‘பாம்புக்கழுத்து ஆமை’ பற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது பெரும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது. சாதாரண ஆமைகளை விட இதன் கழுத்து மிக நீளமாக, அதன் ஓட்டின் நீளத்தில் பாதியளவு இருப்பதால், முதல் பார்வையில் இதைப் பார்ப்பவர்கள் ஒரு பாம்போ என்று தவறாக நினைத்துவிடுகிறார்கள்.
சுமார் 11 அங்குலம் வரை வளரக்கூடிய இந்த ஆமை, ஒரு மாமிச உண்ணியாகும். இது மீன்கள், இறால்கள் மற்றும் பூச்சிகளை ஒரு பாம்பைப் போலவே மிக வேகமாகத் தாக்கி வேட்டையாடி உண்கிறது.
இந்த ஆமையின் விசித்திரமான தற்காப்புத் திறன் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள, இது தனது உடலில் இருந்து ‘கஸ்தூரி’ எனப்படும் மிகக் கடுமையான துர்நாற்றம் வீசும் திரவத்தை வெளியேற்றுகிறது.
View this post on Instagram
“>
இந்தத் துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல் எதிரி விலங்குகள் அங்கிருந்து ஓடிவிடும் என்பதால், இது ‘துர்நாற்ற ஆமை’ என்றும் அழைக்கப்படுகிறது.
அரிய வகை உயிரினமான இதைப் பார்த்த பல இணையவாசிகள், இது பாதி ஆமை பாதி பாம்பு போல இருப்பதாக ஆச்சரியத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
