பாகிஸ்தானின் கராச்சி நகரில் தெருவோர உணவுகளைப் படம்பிடித்துக்கொண்டிருந்த வெளிநாட்டு வோல்கர் ஒருவர், அங்குள்ள ஒரு கடையில் தென்னிந்திய உணவுகள் விற்பனை செய்யப்படுவதைக் கண்டு வியப்படைந்தார்.

அந்த உணவகத்தில் மசாலா தோசை, வடா பாவ் மற்றும் பாவ் பாஜி ஆகியவை கிடைப்பதைக் கண்ட அவர், அதன் விலையைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தார். ஒரு மசாலா தோசை மற்றும் பாவ் பாஜியின் விலை தலா 800 பாகிஸ்தானி ரூபாயாக இந்திய மதிப்பில் சுமார் 250 ரூபாய் இருந்ததைக் கண்டு அவர் மலைத்துப்போனார்.

இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மசாலா தோசை போன்ற உணவுகள் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதைப் பல இணையவாசிகள் சுட்டிக்காட்ட, அதற்குப் பதிலளித்த அந்த வோல்கர், கராச்சியின் அந்தப் பகுதியில் இத்தகைய உணவுகள் ஆடம்பர உணவாகக் கருதப்படுவதாலேயே அதிக விலைக்கு விற்கப்படுவதாக விளக்கமளித்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Karl Rock (@iamkarlrock)

“> 

அந்த உணவகம் எவ்வாறு தோசை மற்றும் பாவ் பாஜியைத் தயாரிக்கிறது என்பதை ஆவணப்படுத்திய இந்த வீடியோ, இரு நாட்டு உணவு கலாச்சாரத்தையும் அதன் விலை வித்தியாசத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் பல சுவாரஸ்யமான கருத்துகளைப் பெற்றுள்ளது.