இன்றைய டிஜிட்டல் உலகில் பாடல்களைக் கேட்க மொபைல் போன்களும் இணையமும் பயன்பாட்டில் உள்ள நிலையில், 90-களின் நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே காணாமல் போன ‘ஆடியோ கேசட்டுகள்’, இன்றும் ஆப்கானிஸ்தானின் சந்தைகளில் பெருமளவில் விற்பனை செய்யப்படுவது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிருஷ்ண காந்த் ராய் என்ற இந்தியப் பயணி, ஆப்கானிஸ்தானின் சந்தைகளில் கடைகள் முழுவதும் கேசட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படம்பிடித்துப் பகிர்ந்துள்ளார். இதைக் கண்டு வியந்த அவர், தனது சிறு வயது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதோடு, அந்தப் பழைய காலத்து உணர்வுகளை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள், தங்களது பழைய நினைவுகளில் மூழ்கிப்போய் கமெண்டுகளைப் பதிவிட்டு வருகின்றனர். “புதிய திரைப்படங்களின் பாடல்களைக் கேசட்டுகளில் வாங்குவதே தனி சுகம்”, “கேசட்டை ரிவைண்ட் செய்ய பென்சிலைப் பயன்படுத்திய காலம் இனி வருமா?” என்பது போன்ற நெகிழ்ச்சியான கருத்துகளைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Krishna Kant Rai | World Explorer (@explorewithkrishna94)

“>

ஒரு காலத்தில் உலகம் முழுவதும் பிரபலமாக இருந்த அந்த ஆடியோ கேசட்டுகள், இன்றும் ஆப்கானிஸ்தானில் உயிர்ப்புடன் இருப்பதைப் பார்த்து, பலரும் தங்களது பால்ய காலத்திற்குச் சென்ற உணர்வைப் பெற்றுள்ளனர். இந்த வைரல் வீடியோ, பலருக்கு ஒரு ஏக்கம் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.