வியட்நாமின் ஹோய் ஆன் பகுதியில் கூடைப் படகு சவாரியில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், தவறுதலாகத் தனது கைபேசியை ஆற்றில் நழுவவிட்டார். இதைக் கண்ட லாக் என்ற 70 வயது முதியவர், அந்த நொடியே தண்ணீரில் குதித்துத் தேடினார்.

சில வினாடிகளிலேயே அந்த கைபேசியை மீட்டெடுத்துப் பயணிகளிடம் ஒப்படைத்த அவரது செயல், அங்கிருந்த சுற்றுலாப் பயணிகளை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. அவர்கள் உற்சாகத்துடன் கைதட்டி அவரைப் பாராட்டினர்.

அந்தப் பகுதியில் நீர்மட்டம் ஆழம் குறைவாக இருந்ததால், லாக் மாமாவால் எளிதாகத் தேட முடிந்தது. மீட்கப்பட்ட கைபேசி நீர் புகாதவாறு இருந்ததால், அது எந்தச் சேதமும் இன்றி சரியாகச் செயல்பட்டது. இதனால் மகிழ்ந்த அந்தச் சுற்றுலாப் பயணி, லாக் மாமாவிற்கு அன்பளிப்பு வழங்கித் தனது நன்றியைத் தெரிவித்தார்.

“>

 

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, வியட்நாம் மக்களின் விருந்தோம்பல் குணத்தையும், பிறருக்கு உதவத் தயாராக இருக்கும் அவர்களின் மனப்பாங்கையும் உலகமெங்கும் உள்ள மக்கள் பாராட்டி வருகின்றனர்.