அமெரிக்காவின் மிக முக்கிய ராணுவப் பிரிவுகளில் ஒன்றான ‘இந்தோ-பசிபிக் கமாண்ட்’ (USINDOPACOM) என்ற பெயரானது, மீண்டும் பழையபடியே ‘பசிபிக் கமாண்ட்’ (USPACOM) என மாற்றப்படுவதாக அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த திடீர் நடவடிக்கை சர்வதேச அரசியல் மற்றும் ராணுவ வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளவும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தவும் அமெரிக்கா திட்டமிட்டிருந்தது.

இதற்காக, கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக ‘இந்தோ-பசிபிக்’ என்ற வார்த்தையை அமெரிக்கா தனது ராணுவ மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் தீவிரமாகப் பயன்படுத்தி வந்தது.
இந்நிலையில், தற்போது அந்தப் பெயரிலிருந்து ‘இந்தோ’ என்ற பகுதி நீக்கப்பட்டு, மீண்டும் பழைய பெயருக்கே மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி மாற்றம், சர்வதேச அரங்கில் இந்தியாவின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முடிவா என்ற கேள்வியையும், விவாதங்களையும் தற்போது எழுப்பியுள்ளது.