திருமணத்திற்குப் பிறகு பெண் தனது பிறந்த வீட்டை விட்டுப் புகுந்த வீட்டிற்குச் செல்லும் ‘விடாயி’ (Vidai) நிகழ்ச்சி பொதுவாகவே கண்ணீரும் சோகமும் நிறைந்ததாக இருக்கும். ஆனால், இங்கு ஒரு குடும்பத்தில் நடந்த விடாயி நிகழ்ச்சியில், தம்பியின் போலி அழுகையால் அரங்கேறிய நகைச்சுவை சம்பவம் இணையவாசிகளிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

​அக்காவின் பிரிவைத் தாங்க முடியாமல் தம்பி உண்மையிலேயே அழுதுகொண்டிருக்கிறான் என நினைத்த தந்தை, அவனைக் ஆறுதல்படுத்த நினைத்து அருகே சென்றுள்ளார். ஆனால், சற்று கூர்ந்து கவனித்த பிறகே, அவன் நிஜமாக அழவில்லை; மாறாக ஆஸ்கார் லெவல் டிராமாவையும் போலி கண்ணீரையும் வடித்துக் கொண்டிருக்கிறான் என்ற திடுக்கிடும் உண்மை தந்தைக்குத் தெரியவந்துள்ளது.

​மகனின் இந்தச் சேட்டையைக் கண்டு பொறுமையிழந்த தந்தை, சட்டென்று அவனது மண்டையில் ஒரு செல்லத் தட்டல் (Tapali) கொடுத்து அவனது போலி நாடகத்தை அம்பலப்படுத்தினார். இந்தக் கலகலப்பான குடும்ப தருணத்தை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது நொடிப் பொழுதில் வைரலானது.

​இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் தம்பியின் ‘ஆஸ்கார் தகுதி வாய்ந்த’ நடிப்பைப் பார்த்துச் சிரிக்காமல் இருக்க முடியவிலை என கமெண்ட் செய்து வருகின்றனர். சிலர், “தம்பி சும்மா பிம்பம் காட்டப் போய் கடைசியில் தந்தையிடம் மாட்டி நொந்து நூலாகிவிட்டான்” என்றும், “தந்தையின் அந்தத் திடீர் ரியாக்ஷன் தான் இந்த வீடியோவின் ஹைலைட்டே” என்றும் ஜாலியாகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். சோகமான சூழலிலும் அரங்கேறிய இந்தச் சின்னஞ்சிறு உடன்பிறப்புகளின் கலாட்டா, இணையத்தில் செம்ம ரகளை செய்து வருகிறது.