சமூக வலைத்தளங்களில் தினந்தோறும் பல விசித்திரமான வீடியோக்கள் வெளியாகி வைரலாவது வழக்கம். அந்த வகையில், சமீபத்தில் ‘எக்ஸ்’ (X) இணையதள பக்கத்தில் வெளியான ஒரு அதிர்ச்சியூட்டும் குடும்பச் சண்டையின் வீடியோ இணையவாசிகளை உலுக்கியுள்ளது. அந்த வீடியோவில் உள்ள தகவலின்படி, 36 வயதுடைய திருமணமான பெண் ஒருவருக்கு, 24 வயது வாலிபருடன் நீண்ட நாட்களாகக் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. ஒருநாள் இவர்களின் ரகசியக் காதலைப் பெண்ணின் கணவன் நேரில் பார்த்து கையும் களவுமாக பிடித்துள்ளார்.
பொதுவாக இதுபோன்ற சம்பவங்களில் அடிதடி, வன்முறை ஏற்படுவது வழக்கம். ஆனால், இந்த கணவனோ கோபத்தை அடக்கிக்கொண்டு யாரும் எதிர்பாராத ஒரு அதிரடி முடிவை எடுத்தார். கள்ளக்காதலர்கள் இருவரையும் கையும் களவுமாகப் பிடித்த செய்தி காட்டுத்தீ போலப் பரவி, அங்கு ஊர் மக்கள் திரண்டனர். இதையடுத்து, “இனி இந்தச் சிக்கலுக்கு கல்யாணம் தான் ஒரே தீர்வு” என முடிவு செய்த கணவன், அங்கிருந்த மக்கள் முன்னிலையிலேயே தனது மனைவிக்கும் அவரது கள்ளக்காதலனுக்கும் மாலை மாற்றித் திருமணம் செய்து வைத்தார்.
Extra-Marital affair Kalesh (Husband Caught his 36y/o wife with 24y/o guy in compromising position, who then forced the two to marry each other) 🫡 pic.twitter.com/QVGjHPo2Ld
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 14, 2026
இந்த விசித்திரத் திருமணத்தின் போது மணமக்களாக நின்ற கள்ளக்காதலர்கள் இருவரது முகத்திலும் எந்த ஒரு மகிழ்ச்சியும் இல்லாமல், தாங்கள் செய்த தவறை எண்ணி மிகுந்த குற்ற உணர்ச்சியோடு காணப்பட்டனர். இந்த வீடியோ ‘@gharkekalesh’ என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டு லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் தங்களது கலவையான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், “இந்தக் கணவர் விவாகரத்து நடைமுறையை மிக அதிவேகமாக முடித்துவிட்டார்.
தனது மொத்தப் பொறுப்புகளையும் அந்த 24 வயது வாலிபருக்கு ஆன்லைனில் டிரான்ஸ்ஃபர் செய்தது போல் மாற்றிவிட்டார், இவர் செம ஆள்!” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர், “கணவர் செய்தது மிகச் சரியான காரியம். அந்த வாலிபருக்குப் பொறுப்பு என்றால் என்னவென்று இப்போதுதான் புரியும்” என்று கள்ளக்காதலர்களுக்குக் கணவன் கொடுத்த நூதன தண்டனையைப் பாராட்டி கருத்துத் தெரிவித்துள்ளார்.
