என்னோட கருத்துக்கள் தவறான முறையில மக்கள்கிட்ட போய்ச் சேர்ந்திருக்கு சார், தயவுசெஞ்சு என்னை மன்னிச்சிடுங்க!” என்று சமூக வலைதளங்களில் எழுந்த கடுமையான விமர்சனங்களுக்குப் பிறகு நடிகர் மாஸ்டர் மகேந்திரன் அவர்கள் பகிரங்கமாக விளக்கமளித்து மன்னிப்புக் கேட்டுள்ளார்.
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற போது, மாநிலத்தின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியான நிலையில், “ஆறு மாதங்களுக்கு யாரும் அரசிடம் கேள்வி கேட்காதீர்கள்” என்றும், “என் வீட்டிலிருந்து கூட மின்சாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்” என்றும் மாஸ்டர் மகேந்திரன் பேசிய கருத்துக்கள் சோசியல் மீடியாவில் கடுமையான ட்ரோல்களுக்கும் பொதுமக்களின் விவாதங்களுக்கும் உள்ளாகின.
இதுகுறித்து இன்று உருக்கமாக விளக்கமளித்துள்ள மகேந்திரன், முதலமைச்சர் விஜய் அவர்கள் பதவியேற்கும்போது ஆறு மாத காலம் அவகாசம் கேட்டிருந்ததை மனதில் வைத்துதான் தான் அப்படிப் பேசியதாகவும், சோலார் பவர் (சூரிய ஒளி மின்சாரம்) இருந்தால் நமது மாநிலம் நல்ல முன்னேற்றத்தைக் காணும் என்ற நல்ல நோக்கில் மட்டுமே அதைக் குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களின் கஷ்டத்தில் தானும் ஒருவனாகப் பங்கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தனது வீட்டில் இருந்து மின்சாரத்தை எடுக்கச் சொன்னதாகவும், தனது பேச்சு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் வெளியிட்டுள்ளார்.
சர்ச்சையை கிளப்பிய பேட்டி… விளக்கம் அளித்த மாஸ்டர் மகேந்திரன்#MasterMahendran | #Controversy | #PolimerNews pic.twitter.com/9inDdZWBvG
— Polimer News (@polimernews) June 17, 2026
“>
