இந்தியா ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின் 4-ஆவது போட்டியின் போது, இந்திய இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி மற்றும் இலங்கை வீரர் விஷன் ஹலம்பகே ஆகியோருக்கு இடையே மைதானத்தில் பயங்கர வாக்குவாதமும் மோதலும் ஏற்பட்டுள்ளது. இந்திய பேட்ஸ்மேனான வைபவ் சூரியவன்ஷியை, இலங்கை வீரர் விஷன் ஹலம்பகே இழிவுபடுத்தும் வகையில் பேசியதே இந்த மோதலுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தைக் கடுமையாகக் கையாண்ட போட்டி நடுவர் (Match Referee) பிரதீப் ஜெயபிரகாஷ், தவறிழைத்த இலங்கை வீரர் விஷனுக்குக் கடுமையான அபராதமும் தண்டனையும் விதித்துள்ளார்;

அதேவேளையில் இந்திய வீரர் வைபவ் சூரியவன்ஷிக்கு தடை ஏதும் விதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ​இதே போட்டியில், இரு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையை விலக்க முயன்ற இலங்கை அணியின் விக்கெட்கீப்பர் நிரோஷன் டிக்வெல்லாவுக்கும் போட்டி நடுவர் அபராதம் விதித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவர் சண்டை போட்டதற்காக அல்லாமல், மைதான நடுவர்களிடம் (Umpires) தேவையில்லாமல் தொடர்ந்து அப்பீல் செய்து விதிகள மீறியதற்காகவே தண்டிக்கப்பட்டுள்ளார் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) தலையீடு ஏதுமின்றி, இலங்கை கிரிக்கெட் வாரியமே (SLC) தன்னிச்சையாகத் தலையிட்டுத் தவறு செய்த தங்களது நாட்டு வீரர்களுக்குக் கடுமையான தண்டனைகளை வழங்கியுள்ளதுடன், தங்கள் சொந்த மண்ணிலேயே இந்திய வீரர்களுடன் இலங்கை வீரர்கள் இப்படி ஒரு வெட்கக்கேடான சண்டையில் ஈடுபட்டது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியையும் கவலையையும் தெரிவித்துள்ளனர்.