பாங்காக்கில் நடைபெற்ற ரைஸிங் ஸ்டார்ஸ் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்குத் தொடக்கம் சவாலாக அமைந்தாலும், தேஜல் மற்றும் ராதா யாதவ் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் அணி சரிவில் இருந்து மீண்டது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 134 ரன்களைச் சேர்த்தது.
தொடர்ந்து 135 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணி, இந்திய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி வெறும் 88 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணி, ஆசிய கோப்பையை வென்று நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ளது.
