பாகிஸ்தானின் குக்கிராமத்தைச் சேர்ந்த ஐனா வசீர் (Aena Wazir) என்ற 8 வயது சிறுமியின் பந்துவீச்சு வீடியோ, சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவின் ஜாம்பவான் டேல் ஸ்டெய்னின் (Dale Steyn) பந்துவீச்சு பாணியை (Action) நினைவுபடுத்தும் வகையில், மிகச் சரியான திசையிலும் வேகத்திலும் ஐனா பந்துவீசுவது அனைவரையும் கவர்ந்துள்ளது. இரண்டாம் வகுப்பு பயிலும் இந்தச் சிறுமி, முறையான விளையாட்டு மைதானங்களோ அல்லது பயிற்சிக் கருவிகளோ இல்லாத ஒரு பின்தங்கிய பகுதியில் வசித்துக் கொண்டு, தனது விடாமுயற்சியால் இந்தத் திறமையை வளர்த்துக் கொண்டுள்ளார்.
8 वर्षांच्या आयना वझीरची वेगवान गोलंदाजी पाहिली का?#AynaWazir #CricketTalent #ViralVideo #FastBowler pic.twitter.com/gk2YpUwga6
— BBC News Marathi (@bbcnewsmarathi) February 22, 2026
“>
பாகிஸ்தான் நட்சத்திர வீரர்கள் பாபர் அசாம் மற்றும் நசீம் ஷா ஆகியோரைத் தனது முன்னுதாரணமாகக் கருதும் ஐனா, எதிர்காலத்தில் பாகிஸ்தான் தேசிய மகளிர் அணிக்காக விளையாடுவதையே தனது லட்சியமாகக் கொண்டுள்ளார்.
