சேலம் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ஒருவரை, கஞ்சா போதையில் இருந்த இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள டிடிவி தினகரன், தமிழகம் முழுவதும் கஞ்சா போன்ற போதைப்பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

காவல்துறையினர் ஆளுங்கட்சியின் கைப்பாவையாகச் செயல்படுவதால், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.தமிழகத்தின் அமைதியைக் கெடுத்து, பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள இந்த ஆட்சிக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக, தமிழகப் பெண்களின் அமைதிப் புரட்சியானது திமுகவின் இந்த மக்கள் விரோத ஆட்சிக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.