மிதுனம் ராசி அன்பர்களே…

இன்று நல்லவர்கள் ஆலோசனை கண்டிப்பாக நம்பிக்கையை கொடுக்கும். காரியங்கள் சூடு பிடிக்க துவங்கும். உழைப்பால் உயர்வு பெறும் நாள். அடுத்தவர்களின் விஷயத்தில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். பெருமிதம் கொள்ளும் நாள். அதே போல் தந்தையிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். தந்தைக்கு என்ன வேண்டுமோ செய்து கொடுக்கப் பாருங்கள். தந்தையிடம் முன்கோபம் பட வேண்டாம்.

எல்லாம் உங்களுக்கு அற்புதமாகவே இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு நேரத்தை வீணடிக்க வேண்டாம். இந்த நாள் உங்களுக்கு கண்டிப்பாக மகிழ்ச்சியான நாளாக இருக்கும். தனவரவுக்கு குறைவிருக்காது. அடுத்தவர்களின் விஷயத்தில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகள் ஓரளவுக்கு தீர்ந்துவிடும். மாறுபட்ட சூழ்நிலையை நீங்கள் அற்புதமாக கையாளுவீர்கள்.

நிதானமான செயல்பாடுகள் வெற்றியை கொடுக்கும். கூடுதல் நன்மையும் பெற்றுக் கொடுக்கும். தொழில் வியாபார நடைமுறையில் ஏற்பட்ட சிக்கல்கள் கண்டிப்பாக விலகிச் செல்லும். சுமாரான பண வரவு இருந்தாலும் அது போதும் என்ற மனநிலை இருக்கும். பண செலவில் சிக்கனத்தை நீங்கள் கடைபிடிக்க வேண்டும். தியானம் தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும் போது தீர ஆலோசித்து பின் எடுப்பது நல்லது. முடிவுகளை மட்டும் யோசித்து எடுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிற ஆடையை அணியுங்கள். மஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதேபோன்று இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அண்ணமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபட்டு பாருங்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும்.

பெண்களுக்கு….

பெண்கள் இன்று உயர் அதிகாரிகளிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லத்தில் கூட கணவனிடம் பேசும் போது கவனமாக இருக்கவும். சில வார்த்தைகள் கோபமான வார்த்தைகளாக வரக்கூடும். சில இடங்களில் பணி சுமை இருக்கக்கூடும். பெண்கள் எதார்த்தமாக நடந்து கொள்ள வேண்டும். புன்சிரிப்புடன் காணப்பட வேண்டும். அப்போதுதான் வெற்றி சுலபமாக கிடைக்கும். காதலைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லை சமாளித்து விட முடியும். காதலுக்கு முடிவெடுக்கும் போது மட்டும் தெளிவு இருக்கட்டும் குழப்பம் அடையாதீர்கள். காதலைப் பற்றி புரிதலை மட்டும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

மாணவர்களுக்கு….

இன்று மாணவர்கள் யோசித்து எதையும் செய்ய வேண்டும். குழப்பம் இல்லாமல் இருக்க வேண்டும். வேண்டாத பிரச்சனைகளில் ஈடுபட வேண்டாம். கெட்ட சகவாசங்களை நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். கல்வியை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக படியுங்கள், படித்த பாடங்களை எழுதி பாருங்கள்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 3, 6  மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை