ரிஷபம் ராசி அன்பர்களே….

இந்த நாள் உங்களுக்கு புரிதல் உணர்வு ஏற்படும் என்று சொல்லலாம் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டு காரியங்களில் ஈடுபட முடியும் வெற்றிக்கான செய்திகள் வீடு தேடி வரக்கூடும். இனிய பயணங்கள் கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும். எல்லோர் மனதிலும் மீண்டும் இடங்களை பிடிப்பீர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குவீர்கள். புத்துணர்ச்சியுடன் இன்று செயல்படுவீர்கள். காலையில் கொஞ்சம் மந்தமாக காணப்படுவீர்கள்.

சுறுசுறுப்புடன் இருக்க நீங்கள் தான் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மற்றபடி பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை. சமாளித்து வெற்றி பெற முடியும். அனைவரிடத்திலும் நீங்கள் நல்ல பெயரை கண்டிப்பாக எடுக்க முடியும். இன்று ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரிடமும் பழகுவீர்கள். இந்த நாள் உங்களுக்கு கண்டிப்பாக மகிழ்ச்சி மிக்க நாளாக இருக்கக்கூடும்.

அதுமட்டுமில்லை வரவேண்டிய பணம் வருவதினால் சந்தோஷம் ஏற்படும் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாக கூடும்.  மனதிற்குள் கருணை உணர்வு அதிகரிக்கும். அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். நல்ல செயல்களை புரிந்து சமூகத்தில் வரவேற்பை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான அனுகூல காரணி பலன் பெறும். உபரி பண வருமானம் கிடைக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்க முடியும்.

இன்று திறமைகள் வெளிப்படும் நாள் என்று சொல்ல முடியும். தேவையான உதவிகள் கிடைக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும்.

பெண்களுக்கு…

பெண்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள். அது மட்டும் இல்லை காரியத்தடை தாமதம் இருந்தது விலகிச் செல்லும். வீண் அலைச்சல் கூட குறைந்துவிடும். முகப்பொலிவு கூடும். காதலைப் பொறுத்தவரை ஏட்டிக்கு போட்டியாக செயல்பட்டவர்கள் விலகிச் செல்லக்கூடும். காதலை பற்றி வீட்டில் கூறுவதும் குடும்பத்தில் கலந்தாலோசிப்பதும் நன்மையை கொடுக்கும்.

மாணவர்களுக்கு…

இன்று மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் இருக்கும். கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெறுவதற்கு தேவையான உதவிகள் கிடைக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கையை மட்டும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 3, 6 மற்றும் 9

அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்