மேஷம் ராசி அன்பர்களே…. 

இன்று வேண்டாத நபர் ஒருவரை நீங்கள் பொது இடத்தில் சந்திக்க வேண்டி இருக்கும். எண்ணத்திலும் பேச்சிலும் கண்டிப்பாக கட்டுப்பாடு அவசியம். மனக்கவலை இருந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் ஜெயிக்க வேண்டும். ஆனால் நாம் கஷ்டப்படுகின்றோம் நம்மால் முடியவில்லை என்ற எண்ணம் இருக்கும். எவ்வளவு கஷ்டத்தை தான் நாம் தாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும்.

எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள். முக்கியமாக மூடநம்பிக்கைகளை நினைத்து கவலைப்பட வேண்டாம். வாழ்க்கையில் நாம் பின்தங்கிய நிலையில் இருக்கும்போது சிந்தனை எங்கெங்கே வேண்டுமானாலும் செல்லும். மந்திரம் மாந்திரீகம் போன்ற விஷயங்களில் பணத்தை செலவு செய்ய வேண்டாம். நியாயமாக நடந்து கொள்ளுங்கள். நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் எல்லாம் சரியாக நடக்கும்.

தொழில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். புதிய இடங்களில் பண செலவு ஏற்படும். போக்குவரத்தில் நீங்கள் கவனத்தை பின்பற்ற வேண்டும். இன்று அலைச்சல் இருக்கும் சக நண்பர்களிடம் கவனமாக பேச வேண்டும். குடும்பத்தில் உங்களுக்கு அனைவரின் ஒத்துழைப்பும் கண்டிப்பாக இருக்கும். குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும். எதிர்த்து பேசியவர்கள் கூட அடங்கி போவார்கள்.

தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆனால் பணவரவு திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளரின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுப்பது நன்மை பயக்கும். வியாபார ஸ்தலத்திற்காக புதிதாக இடம் வாங்கக்கூடிய சூழல் இருக்கிறது. இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியிலும் ஈடுபடுங்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பெண்களுக்கு…. 

இன்று பெண்களுக்கு இஷ்ட தெய்வம் துணையாக இருக்கும். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். நிதி தொடர்பான விஷயங்களை தெளிவாக அணுகுவீர்கள். பெண்களுக்கு ஆசைகளும் கனவுகளும் பூர்த்தியாகும். காதலில் சமாளித்து வெற்றி பெற முடியும். ஆனால் ஆரம்பம் சற்று குழப்பமாக இருக்கும் வேறொன்றுமில்லை.

மாணவர்களுக்கு….

இன்று மாணவர்கள் பெரியவர்களுக்கு மதிப்பு கொடுங்கள். நன்கு படிக்க கற்றுக் கொள்ளுங்கள். படித்த பாடங்களை எழுதி பாருங்கள். ஒரு முறைக்கு இருமுறை சிந்தியுங்கள்.  அவசரப்படாமல் சிந்தித்து செயல்படுவது மிகவும் முக்கியம்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை