கடக ராசி அன்பர்களே…

இன்று நீங்கள் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். செல்வபோக வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள். சுறுசுறுப்புடன் செயல்பட்டு வெற்றியை பெறுவீர்கள். அடுத்தவர்களிடம் பேசும் போது மட்டும் கவனம் இருக்கட்டும். உரையாடல்களை சரியாக புரிந்து கொண்டு நீங்கள் உரையாட வேண்டும். முன்கோபம் இருக்கவே கூடாது. மனப்பதட்டம் சுத்தமாக இருக்கக் கூடாது. சிந்தியுங்கள் மனதை ஒருநிலைப்படுத்துங்கள். அதுதான் உங்களுக்கு வெற்றி கொடுக்கும். குழப்பம் இல்லாமல் இருந்தாலே பாதி பிரச்சனை தீர்ந்துவிடும்.

இன்றைய பணி முழு அளவில் வெற்றியைக் கொடுக்கும் தொழில் வியாபாரத்தில் அபரிவிதமான வளர்ச்சி ஏற்படும் ஆதாய பண வரவு கிடைக்கும் குடும்ப தேவைகளை நிறைவேற்றி விடுவீர்கள் இளமைக்கால நண்பர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் ஏற்படக்கூடும் இன்று உங்களுடைய கருத்துக்களுக்கு சிலர் மாற்றுக் கருத்து தெரிவிப்பார்கள் அதனை பெரிது படுத்த வேண்டாம் எதிர்த்து பேசாமல் அமைதியாக இருப்பது நல்லது.

நல்லவர்கள் உங்களுக்கு நட்பாக கூடும். திறமைகள் கண்டிப்பாக வெளிப்படும். கடினமான சூழல் கண்டிப்பாக மாறிவிடக்கூடும். மனதை தளரவிடாமல் எதிலும் ஈடுபடுவது நல்லது. வெற்றிக்கான வழியை நாம் தான் கண்டுபிடிக்க முடியும். கணவன் மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சரியாகும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. தாய் வழி உறவுகளுடன் சஞ்சலங்கள் ஏற்பட்டு சரியாக கூடும்.

குழப்பத்திற்கு மட்டும் இடம் கொடுக்க வேண்டாம். முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பச்சை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதேபோன்று இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த செயலிலும் ஈடுபடுங்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும்.

பெண்களுக்கு….

பெண்கள் இன்று எந்த ஒரு பிரச்சனையும் துல்லியமாக அணுகி வெற்றி பெறுவீர்கள். முன் கோபம் அவ்வப்போது வெளிப்படும். வீட்டில் பணி சுமை கொஞ்சம் அதிகமாக இருக்கக்கூடும். வேலை செய்யக்கூடிய இடங்களில் கூட பணி சுமை கொஞ்சம் இருக்கும். காதலைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லை. சமாளித்து வெற்றி பெற முடியும். இருந்தாலும் காதலில் முடிவெடுக்கும் போது தெளிவாக இருங்கள். காதலுக்காக நேரத்தை வீணடிக்க வேண்டாம்.

மாணவர்களுக்கு….

இன்று மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விளையாடும் போது கவனமாக இருக்க வேண்டும். சக மாணவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். இன்று மாணவர்கள் முன்கோபம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எதையும் யோசித்து செய்யுங்கள். அது வெற்றியைக் கொடுக்கும். இன்று கல்விக்காக மட்டுமே நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்டமான திசை : வடகிழக்கு

அதிர்ஷ்டமான நிறம் : பச்சை மற்றும் நீளம்

அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 7