சிம்மம் ராசி அன்பர்களே…

இந்த நாள் முழு முயற்சிகளால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். செயல்களில் திறமை கண்டிப்பாக வளரக்கூடும். நீங்கள் யார் என்று இந்த உலகத்திற்கு நிரூபித்துக் காட்டும் நாள் என்று சொல்ல முடியும். அடுத்தவர்கள் வியக்கும்படி நடந்து கொள்வீர்கள். பொருளாதாரத்தையும் கண்டிப்பாக உயர்த்திக் கொள்வீர்கள். மனப்பதட்டம் இல்லாமல் இன்று காணப்படுவீர்கள். சுமூகமான உறவு இன்று வெளிப்படும்.

அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். அதனை இன்று மட்டுமல்ல எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உறவுகளால் ஏற்பட்ட விரிசல் கண்டிப்பாக விலகிச் செல்லும். மாறுபட்ட கருத்துடையவர்களிடம் கொஞ்சம் கவனமாக பேசுங்கள். நீங்கள் ஒன்று சொல்லப் போக அவர்கள் ஒன்று சொல்ல மனதிற்குள் வருத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதையும் நிதானமாக செய்வது முக்கியம்.

இன்று எதையும் யோசித்து செய்தால் வெற்றி உங்கள் பக்கம் வரக்கூடும். அதுமட்டுமில்லை பண வரவு சீராக இருக்கும். பெற்றோரின் தேவையை அறிந்து நிறைவேற்றுவீர்கள். இன்று குடும்பத்தில் இருப்பவர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டு பின்பு சரியாக கூடும். கணவன் மனைவி இடையே இருந்த பூசல் சரியாகும். பிள்ளைகளுக்கு வேண்டியவற்றை வாங்கி கொடுப்பீர்கள். அவர்களின் நலனுக்காகவும் பாடுபட வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வு அடையக்கூடும். வேலை செய்யக்கூடிய இடங்களில் கொஞ்சம் பார்த்து பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். வீண் பேச்சுக்களை தவிர்த்து விட வேண்டும். எதிர்பார்த்த பணி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். மனதிற்கு பிடித்தமான வீடு மாற்றம் ஏற்படக்கூடும். சிறுக சிறுக சேமித்த பணம் செலவுக்கு பயன்படும். இன்று மாமன் மைத்துனர் வகையில் கண்டிப்பாக உதவிகள் கிடைக்கும்.

காதலை பொருத்தவரை பிரச்சனை இல்லை. சமாளித்து வெற்றி பெற முடியும். காதல் வெற்றியை நோக்கி செல்கின்றது பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதே போன்று இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணிகளிலும் ஈடுபட்டு பாருங்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பெண்களுக்கு…

பெண்கள் இன்று ருசியான உணவை உண்டு மகிழ்வீர்கள். இல்லத்தை சுத்தபத்தமாக வைத்துக் கொள்வீர்கள். மன அமைதியுடன் காணப்படுவீர்கள். பெண்களுக்கு இன்று கோரிக்கைகள் நிறைவேறும் நாள் என்று சொல்ல முடியும்.

மாணவர்களுக்கு….

இன்று மாணவர்கள் புத்தம் புதிய ஆடை வாங்கக்கூடிய சூழல் இருக்கிறது. கல்விக்கான செலவுகளையும் தயார் செய்து கொள்வீர்கள். தடைகளை உடைத்தெறிந்து கல்வியில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாடு சென்று படிக்கக்கூடிய யோகம் உள்ளது. முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை. மாணவர்கள் முன்கோபம் கொள்ள வேண்டாம்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை