கன்னி ராசி அன்பர்களே…

இன்று வீடு மாற்றம் இடமாற்றம் கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும். தன வரவு உங்களைத் தேடி வரும். கருத்துக்கள் பரிமாறும் போது மட்டும் கவனமாக இருங்கள். சட்டென்று வரும் முன் கோபத்தை விட்டு விட வேண்டும். பெரியவர்களிடம் உரையாடும்போது கவனமாக இருங்கள். மதிப்பும் மரியாதையுடன் பேச வேண்டும். எதையும் சிந்தித்து செயல்படுத்துங்கள். வரவேண்டிய பணம் கண்டிப்பாக வரும். கடனில் ஒரு பகுதி அடைபடக்கூடிய சூழல் இருக்கிறது.

அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிட வேண்டாம். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள். தன வரவை கண்டிப்பாக மேம்படுத்திக் கொள்வீர்கள். எடுத்தோம் கவுத்தோம் என்று எந்த செயலிலும் ஈடுபட மாட்டீர்கள். செயலில் திறமை கண்டிப்பாக வெளிப்படும். முக்கியமான பணிகளை பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம். சுய தேவை ஓரளவு கண்டிப்பாக பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் உள்ள சிரமத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

அளவான பண வரவு கிடைக்கும். ஒவ்வாத உணவை சாப்பிட வேண்டாம். இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்ப பிரச்சினை கண்டிப்பாக தீரும். மனக்கவலை ஏற்பட்டாலும் கண்டிப்பாக நீங்கும். எதிர்பாராத செலவுகள் ஒரு பக்கம் ஏற்படும். மற்றவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. பகை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது மிக நல்லது. எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் பாராட்டு கிடைப்பது கொஞ்சம் கடினம் தான். ஆனால் அதனைப் பற்றி நீங்கள் பெரிது படுத்த மாட்டீர்கள்.

சிலரது எதிர்பாராத பேச்சு மன வருத்தத்தை கொடுக்கும். அதையும் நீங்கள் பெரிது படுத்த வேண்டாம். சொத்து சார்ந்த விஷயங்கள் அனுகூலத்தை கொடுக்கும். நல்லது கெட்டதுகளில் பங்கு எடுப்பீர்கள். தூய்மையான எண்ணம் கொண்டவராக இருப்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஊதா நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதே போன்று இன்றைய தினம் சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வழங்கிவிட்டு எந்த ஒரு பணிகளிலும் ஈடுபட்டு பாருங்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பெண்களுக்கு…

பெண்களுக்கு சுகபோக வாழ்க்கை அமையும் இல்லத்தில் சந்தோஷம் ஏற்படக்கூடும். கையிலும் காசு பணம் இருக்கக்கூடும். பெண்கள் நினைத்த வாழ்க்கையை கண்டிப்பாக வாழ முடியும். பொது விஷயங்களை கையாளும் போது கவனம் இருக்கட்டும். பெண்கள் இன்று மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் நாள் என்றே சொல்ல முடியும். காதலைப் பொறுத்தவரை பிரச்சினை இல்லை. காதல் அடுத்த கட்ட நகர்விற்கு செல்லும் காதலை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

மாணவர்களுக்கு…

இன்று மாணவர்கள் எதையும் யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். சிந்தனையை ஒரு நிலைப்படுத்துங்கள். கல்வியில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். நன்கு படியுங்கள் படித்த பாடங்களை எழுதி பாருங்கள். மாணவர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக அமையும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 3, 5  மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் மஞ்சள் நிறம்