மேஷம் ராசி அன்பர்களே…. 

இந்த நாள் நல்ல வருமானம் வருவது போல் தோற்றமளிக்கும். ஆனால் அதில் தாமதம் ஏற்படும். வீணாசைகள் மனதில் தோன்றிக் கொண்டே இருக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். பதவி அல்லது இடமாற்றம் போன்றவை ஏற்படக்கூடும். தொழில் வியாபாரத்தில் புத்தி சாதுரியத்தால் மட்டுமே முன்னேறி செல்ல முடியும். சரக்குகளை அனுப்பும் போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்ப்பந்தமாக சில இடமாற்றம் ஏற்படக்கூடும். பணி மாற்றம் ஏற்படும். உழைப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப உறவுகளை பலப்படுத்துங்கள். கோபத்தை தவிர்க்க முயலுங்கள். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக கடுமையாக பாடுபடுவீர்கள்.

உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கிறது. ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக காரம் சேர்க்க வேண்டாம். எண்ணெய் சம்பந்தப்பட்ட உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. உடல் உஷ்ணமாக இருக்கும். இன்று பெண்கள் எதிலும் அவசரப்படாமல் நிதானமாக செயல்பட வேண்டும். முன்கோபம் இல்லாமல் இருக்க வேண்டும்.

பெண்கள் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பெண்கள் தயவுசெய்து கோபப்பட வேண்டாம். இன்று மாலை நேரத்தில் நடை பயிற்சி உடல் பயிற்சி மேற்கொள்ளுங்கள். காதலை பொருத்தவரை சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கும். விட்டு கொடுத்து செல்வதும் பொறுமையாக இருப்பதும் நல்லது. காதலுக்காக இப்போதைக்கு எந்த முக்கியமான முடிவும் எடுக்க வேண்டாம். மாணவர்கள் இன்று தனித்து செயல்படுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

கல்வியின் மீது முழு அக்கறை இருக்கும். படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். நன்றாக படியுங்கள் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு அல்லது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியுங்கள். இவை உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதே போன்று இன்று காலை சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிப்பட்டு எந்த காரியங்களிலும் ஈடுபடுங்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

 

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 6, 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு