சென்னை, நந்தனம் YMCA உடற்பயிற்சி கல்லூரி முதல்வர் ஜார்ஜ் ஆபிரகாம் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது அளிக்கப்பட்ட புகாரில் சைதாப்பேட்டை போலீசார் இன்று அவரை கைது செய்தனர். முதலில் ஒரு மாணவி புகார் அளித்த போது ஜார்ஜ் ஆபிரகாம் முன் ஜாமீன் வாங்கியிருந்தார்.  தற்போது இரண்டாவது மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது.