இந்த ஜனவரி மாதம் மாணவர்களுக்கு மிகவும் உற்சாகமான மாதமாக அமைந்துள்ளது. ஆங்கில புத்தாண்டு மற்றும் குடியரசு தின விடுமுறைகளுடன், தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் திருவிழாவும் வரிசையாக வருகிறது.

அரசு அறிவிப்பின்படி ஜனவரி 15 முதல் 17 வரை பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கலுக்காக ஏற்கனவே மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த நாள் ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை என்பதால், அதுவும் ஒரு விடுமுறை நாளாக இயல்பாகவே கிடைக்கிறது.

இந்நிலையில், வெளியூரில் இருப்பவர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையைக் கொண்டாட ஏதுவாக, ஜனவரி 14-ம் தேதி போகி பண்டிகைக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் இந்த எதிர்பார்ப்பை ஏற்று, தமிழக அரசு விரைவில் போகி விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி ஜனவரி 14 முதல் 18 வரை தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்தால், மாணவர்கள் இந்த ஆண்டு பொங்கலை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை ஏற்படும்.