தமிழகத்தில் நேற்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், தனியார் டிவி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவிலும் கலக்கி வரும் அறந்தாங்கி நிஷா, ஈரோட்டில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் படித்து வந்த தனது மகன் இத்தேர்வில் 322 மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி அடைந்துள்ளதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், நேற்று முன்தினம் இரவு முதலே மற்ற பெற்றோர்களைப் போலப் பெரும் பயத்துடனும் பதற்றத்துடனும் காத்திருந்ததாகவும், தற்போது மகன் எடுத்துள்ள இந்த மதிப்பெண் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
<a href=”http://
View this post on Instagram
“>
மகன் பெற்ற மதிப்பெண்களைத் தாண்டி, தேர்வு முடிவுகளால் மன அழுத்தத்தில் இருக்கும் மாணவர்களுக்காக நிஷா பேசிய ஆறுதல் வார்த்தைகள் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகின்றன. “மதிப்பெண்கள் என்பது அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான ஒரு படிக்கட்டு மட்டுமே தவிர, அதுவே வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இறுதி முடிவு அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மதிப்பெண் குறைந்தவர்கள் 12-ஆம் வகுப்பில் சாதிக்க முயல வேண்டும் என்றும், திறமை இருந்தால் வாழ்வில் எளிதாக முன்னேறலாம் என்பதால் யாரும் மனம் உடைய வேண்டாம் என்றும் கண்ணீருக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகும் மாணவர்களுக்குத் தைரியம் ஊட்டியுள்ளார். தேர்வு முடிவுகளால் பதற்றமடையும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அறந்தாங்கி நிஷாவின் இந்த இயல்பான பதிவு ஒரு சிறந்த வழிகாட்டுதலாக அமைந்துள்ளது.
