தமிழக அரசியல் களத்தையே உலுக்கும் அடுத்த மெகா அதிரடியாக, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) அதிகாரப்பூர்வமாகப் பங்கேற்கிறது.

இதுகுறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விஜய் அமைச்சரவையில் விசிக பங்கேற்கிறது; எங்கள் கட்சி சார்பில் திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ வன்னியரசு அமைச்சராகப் பொறுப்பேற்கிறார்” என அதிரடியாக அறிவித்து ஒட்டுமொத்த அரசியல் கூடாரத்திற்கும் ‘விசில்’ பறக்கவிட்டுள்ளார்.

தவெக ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தந்து வந்த விசிக, இப்போது திடீரென ஆட்சி அதிகாரத்திலும் நேரடியாகப் பங்கேற்க முடிவெடுத்திருப்பது கோட்டை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், ” அரசியல் விமர்சகர்கள் மத்தியில் அனல் பறக்கும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.