விஜய் அமைச்சரவையில் விசிக இணையப் போவதாக திருமாவளவன் அறிவித்த சூட்டோடு சூடாக, அக்கட்சியின் சீனியர் முகமும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷாநவாஸ் விசிக-விலிருந்து விலகி விரைவில் திமுகவில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வத் தகவல் அறிவாலய வட்டாரத்தையே அதிரவைத்துள்ளது.
தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்பதால், அக்கட்சி திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு தவெக பக்கம் சாய்கிறது என்ற பேச்சுக்கள் பலமாக எழுந்த நிலையில், இந்த முடிவில் உடன்பாடில்லாத ஆளூர் ஷாநவாஸ் அதிரடியாகத் தாய் கழகத்தை விட்டு வெளியேறத் துணிந்துள்ளார்.
“திருமாவளவன் தளபதி பக்கம் போனா.. ஆளூர் ஷாநவாஸ் கலைஞர் அறிவாலயம் வர்றாரு!” என கோட்டை வட்டாரமே இந்த திடீர் ட்விஸ்ட்டால் ஆடிப்போய் கிடக்கும் வேளையில், இந்த மெகா விக்கெட் வீழ்ச்சி தற்போதைய தமிழக அரசியல் சூழலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
