தமிழகத்தில் இயல்பை விட வெயிலின் தாக்கம் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குழந்தைகள், வயதானவர் மற்றும் கர்ப்பிணிகள் முடிந்த வரை வீடுகளுக்குள்ளேயே இருக்கவும். தொடர்ந்து இரண்டு நாள் மிக அதிக வெயிலில் இருக்க நேர்ந்தால் heat stroke எனப்படும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உடல் சூடு, தோலில் எரிச்சல், வாந்தி, மயக்கம், தலைவலி உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.