ஹாங்காங்கில் மதுபோதையில் இருந்த 4 ஆண்களைச் சொகுசு விடுதிகள் மற்றும் படிக்கட்டுகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக 36 வயது நபர் ஒருவரை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் கடந்த 2025 ஆகஸ்ட் முதல் இந்தாண்டு ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்த கொடூர சம்பவங்கள் நடந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்களில் 19 வயது இளைஞர் ஒருவர், மது அருந்திவிட்டு மயங்கிய நிலையில் மறுநாள் நிர்வாணமாக விழித்தெழுந்து, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், தை போ பகுதியைச் சேர்ந்த அந்தப் புகார்தாரரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரின் செல்போனைச் சோதித்தபோது, அவர் மேலும் மூன்று ஆண்களைப் பாலியல் வன்கொடுமை செய்து, அவற்றை ரகசியமாக வீடியோ எடுத்த அதிர்ச்சித் தகவல் வெளிவந்தது.
இதனால் இவர்களில் 22 மற்றும் 23 வயதுடைய இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், குற்றவாளியிடமிருந்து லேப்டாப், குற்றத்தின் போது அவர் அணிந்திருந்த உடைகள் மற்றும் 6 வியாக்ரா மாத்திரைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பலத்த உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள ஹாங்காங் போலீசார், வன்கொடுமை, சட்டவிரோதமாக ரகசிய வீடியோ எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
