சென்னையில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெருக்கடியைக் கருத்தில் கொண்டு போட்டிகளை வேறு தேதிக்கு மாற்ற வேண்டுமெனத் தொடரப்பட்ட இந்த வழக்கால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவியது.

​இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே சென்னையில் ஒரு போட்டி எந்தவித விதிமீறல்களும் இன்றி வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதைச் சுட்டிக்காட்டினர். “2வது போட்டியையும் கண்டு ரசியுங்கள்” என்று பாசிட்டிவான கருத்தைக் கூறிய நீதிபதிகள், போட்டிகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை எனத் தெளிவுபடுத்தி, ரசிகர்களின் ஐபிஎல் கனவை நனவாக்கியுள்ளனர்.