12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வருகின்ற மே 6ம் தேதி வெளியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து B.E, B.Tech, B.Arch உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் பதிவை மே மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடங்க பொறியியல் மாணவர் சேர்க்கை ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு லட்சம் பொறியியல் படிப்புக்கான இடங்கள் உள்ளன என்பதால் விண்ணப்பம் செய்வதற்கு ஒரு மாதம் வரை கால அவகாசம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.