ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி, தனது அதிரடி பேட்டிங்கால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரள வைத்துக் கொண்டிருப்பவர் 15 வயது இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி. மைதானத்தில் பேட்டிங்கில் அசுரத்தனம் காட்டினாலும், நிஜத்தில் தனக்கு இன்னும் 15 வயது தான் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு செம க்யூட்டான சேட்டையைச் செய்து ரசிகர்களைச் சிரிக்க வைத்துள்ளார்.
சமீபத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டி முடிந்த பிறகு, பிரசன்டேஷனில் விருது வாங்கிவிட்டு மைதானத்தின் நடுவே நடந்து வந்த வைபவ், திடீரென தான் அணிந்திருந்த ஹாஃப் ஷார்ட்ஸுக்கு மேல் போட்டிருந்த முழு டிராக் பேண்ட்டை (Lower) கழட்டி, ஜாலியாகத் தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு டிரஸ்ஸிங் ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
கோடிக்கணக்கான மக்கள் தங்களை லைவ் டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணமே இல்லாமல் ஒரு சின்ன குழந்தையைப் போல வைபவ் செய்த இந்தச் சேட்டை கேமராவில் கச்சிதமாகப் பதிவாகிவிட்டது. இதைப் பார்த்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளர் ரோமி பிந்தர், உடனடியாக ஓடிவந்து வைபவின் தோளில் இருந்த பேண்ட்டை வாங்கி, ஒரு சின்ன குழந்தையைப் போல அவரைப் பக்குவமாக டிரஸ்ஸிங் ரூமிற்கு அழைத்துச் சென்றார்.
Vaibhav Suryavanshi has zero seriousness, except when he is smacking bowlers for fun. 😭pic.twitter.com/U954qdmZVq
— Cricket Central (@CricketCentrl) May 20, 2026
மைதானத்தில் பவுலர்களைப் கதறவிட்டாலும் உள்ளுக்குள் அவர் இன்னும் குழந்தைதான் என்பதை காட்டும் இந்த வீடியோ இணையத்தில் பயங்கர வைரலாகி வருகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் 1 சதம், 3 அரைசதங்களுடன் 579 ரன்கள் குவித்து, 236 என்ற அசுரத்தனமான ஸ்ட்ரைக் ரேட்டுடன் தற்போது ‘ஆரஞ்சு கேப்’ வைபவ் சூர்யவன்ஷி வசம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
