தவெக-வின் அசுர வளர்ச்சி கேரளா வரை பரவி உள்ளதால், மற்ற மாநில மக்கள் இந்த சினிமா மாயை விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடியாக எச்சரித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய், திரைப்படங்களில் பேசிய வசனங்களை மட்டுமே மூலதனமாக வைத்து இந்தத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்துள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ள அவர், பல ஆண்டுகளாகக் களத்தில் இருக்கும் அனுபவசாலிகளை ஓரம் தள்ளிவிட்டு, ஒரே நாளில் ஏகப்பட்ட மெம்பர்களைச் சேர்த்து ஆட்சியைப் பிடிக்கும் இந்த ட்ரெண்ட் மற்ற மாநிலங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

​மேலும், திமுக பாணியிலேயே மத்திய அரசுக்கு எதிரான எதிர்ப்பை மக்கள் மனதில் விதைக்கக் கூடாது என்றும், மத்திய அரசு தமிழகத்திற்குச் செய்த நல்ல விஷயங்களைச் செப்புத் தகடில் செதுக்கிப் பாராட்டியிருக்க வேண்டும் என்றும் அவர் காரசாரமாகத் தனது அறிக்கையில் சாடியுள்ளார்!