தென் கொரியாவின் பிரபலத் திரைப்பட, டெலிவிஷன் நடிகையாக இருந்த காங் சியோ ஹா (வயது 31) வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், இன்று  அவரது உடல்நிலை மோசமாகி உயிரிழந்தார்.

இவரது இறுதிச் சடங்கு ஜூலை 16ஆம் தேதி காலை சியோலில் நடைபெற உள்ளது. இவரது மரண செய்தி உறுதியான பிறகு அவரது குடும்ப உறுப்பினர் இன்ஸ்டாகிராமில் அவருக்கான அஞ்சலியை பகிர்ந்துள்ளார்.

“உனக்கு இந்த அளவுக்கு வலி இருந்தாலும், எங்களை பற்றி நீயே கவலைப்பட்டாய்… உணவுக்கூட சாப்பிட முடியாத நிலையில் இருந்த நீ, என் உணவுக்குச் செலவு செய்யப் பிடித்தம் பிடித்தாய்” என அவரது தங்கை பதிவிட்டுள்ளார்.

‘ஸ்கூல்கேர்ள் டிடெக்டிவ்ஸ்’, ‘ஃபர்ஸ்ட் லவ் அகெய்ன்’, ‘நோபடி நோஸ்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்திருந்த காங், கடைசி வரை தன்னலமின்றி வாழ்ந்தவர் என அனைவரும் பாராட்டுகின்றனர். அவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.