மும்பையில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் சந்திக்கும் அவலத்தை, நடிகர் மோகித் ஹிரானந்தனி தனது இன்ஸ்டாகிராம் வீடியோ மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். மழை பெய்தவுடன் தனது குடியிருப்பில் இருந்த ஐந்து மின்தூக்கிகளும் பழுதாகி நின்றதால், அவர் 30 மாடிகள் வரை படிக்கட்டுகளில் ஏறிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார்.
மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் வாடகை செலுத்தி, சொகுசு வசதிகள் கொண்ட வீட்டில் வசிப்பதாகக் கூறினாலும், மழைக் காலத்தில் அடிப்படை வசதிகள் கூடச் சரியாகச் செயல்படவில்லை என்று அவர் தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார். மேலும், பல போராட்டங்களுக்குப் பிறகு வீட்டிற்குச் சென்றால், அங்கு தண்ணீர் வசதியும் இல்லாததைக் கண்டு அவர் மிகுந்த ஏமாற்றமடைந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, மும்பை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிக வாடகை வசூலிக்கும் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர், அடிப்படை பராமரிப்புப் பணிகளில் காட்டும் அலட்சியத்தை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“சொகுசு என்ற பெயரில் விளம்பரப்படுத்துவது மட்டுமே உண்மை, நிஜத்தில் அடிப்படை வசதிகள் கூடக் கிடைப்பதில்லை” என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
“>
அதிக விலைகொடுத்து சொகுசு குடியிருப்புகளில் வசித்தாலும், மழைக் காலங்களில் இத்தகைய இன்னல்களைச் சந்திப்பது மும்பை வாழ்க்கையின் ஒரு கசப்பான யதார்த்தமாகிவிட்டது என்று பலரும் வருத்தத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
